என்.ஜே.யூ.வில் இணைந்த கடலூர் பத்திரிகையாளர்கள்!

27-06-2019

என்.ஜே.யூ.வில் இணைந்த  கடலூர் பத்திரிகையாளர்கள்!

 கடலூர், ஜூன் 27-

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனில் கடலூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் இணைந்தனர்.


நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் முன்னிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் தங்களை  என்ஜேயூவில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது புதுச்சேரி செய்தியாளர்கள் லோகநாதன், செல்லப்பன், கடலூர் முத்துக்குமார், சி.. ராஜா, லோகநாராயணன் உள்ளிட்ட செய்தியாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், என்ஜேயூ  தேசிய இணைச் செயலாளர் வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கடலூர் சூரியபிரியா தங்கும் விடுதியில் நடந்த கூட்டத்தில் செய்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டு என்ஜேயூவில் உறுப்பினர்களாக சேர்வதற்கு உண்டான விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.