உறக்கத்தில் அமரரானார் செய்தியாளர் என்ஜேயூ தேசிய தலைவர் இரங்கல்!

28-06-2019

உறக்கத்தில் அமரரானார் செய்தியாளர்
என்ஜேயூ தேசிய தலைவர் இரங்கல்!

வேலூர், ஜூன் 28, 2019-

உறக்கத்தில் அமரரான செய்தியாளர் பிரசன்னா குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார்.

இதுகுறித்து என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவதுகிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னர் தெருவில் தனது மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதியுடன் வசித்து வந்தவர் பிரசன்னாதனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பிரசன்னா பணிபுரிந்து வந்தார்.   நள்ளிரவில் மூவரும் வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு உறங்கிக் கொண்டிருந்த வேளையில் குளிர்சாதனப் பெட்டி வெடித்ததாகக் கூறப்படுகிறது. வீடு முழுவதும் புகை பரவவே உறங்கிக் கொண்டிருந்த மூன்று பேரும் விழித்துக் கொண்டு தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.


ஆனால் புகை மண்டலம் சூழ்ந்த காரணத்தாலும், வாயுவின் நெடி அதிகமாக இருந்த காரணத்தாலும் மூவரும் மூச்சுத்திணறி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப் படுகிறது.   ஜனநாயகத்தின் நான்காவது  தூணாக விளங்கும் செய்தித்துறையில் பணியாற்றிய அவரது பணி  அளப்பரியது, போற்றக்கூடியதுஅவரது இழப்புஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரை இழந்து வாடிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், சக  ஊழியர்கள் அனைவருக்கும், ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், அவரது ஆன்மா இறைவனடி நிழலில் சேரவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.

ஒரு செய்தியாளர் தயாராக குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் அவரது மறைவு நொடிகளில் நிகழ்ந்துள்ளது. இது செய்தித்துறையில் ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். செய்தியாளர்கள் மறைந்து விட்டால் அந்த இடத்தை அவ்வளவு எளிதில் நிரப்பி விட முடியாது. செய்திகளை சேகரித்து தரும் பணியும்  சேவைதான். . இப்படி பொதுவாழ்வில் மக்களோடு மக்களாக பணியாற்றிய ஒரு ஆற்றல் மிகு செய்தியாளர் திடீரென்று அகால மரணமடைவது என்ற செய்தி செய்தித்துறைக்கு பேரிடியாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை காணிக்கையாக்குகிறேன்

செய்தியாளர்கள் வாழ்க்கை இப்படி முடிவது பெரும் சோகத்தை சக செய்தியாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. செய்தியாளர்கள் அனைவரும் மனதை தேற்றிக் கொண்டு அண்ணாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி புண்பட்ட மனதை தேற்றிக் கொள்ளுமாறு மிகவும் வருத்தத்துடன் சிரம் தாழ்ந்து தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.   என்ஜேயூ என்றென்றும் அவரது குடும்பத்தாருக்கு உற்ற உறுதுணையாக செயல்படும் என்பதையும் இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்அரசு வாயிலாக அதாவது செய்தித்துறை மூலம் அவரது குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் என்ஜேயூ பெற்றுத்தரும் என்றும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் அறிக்கையில் என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் தெரிவித்துள்ளார்


காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா, தாய் ரேவதி ஆகியோர் குளிர்சாதனப் பெட்டி வெடித்து சிதறிய விபத்தில் நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக பலியாயினர். அவர்களது ஆன்மா சாந்தியடைய வேலூரில் நேஷ்னல் ஜர்னலிஸ்டஸ் யூனியன் தலைமை அலுவலகத்தில், நேஷ்னல் ஜர்னலிஸ்டஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் தலைமையில்தேசிய இணை செயலாளர் .வாசுதேவன், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ராமன்குமார் மற்றும் செய்தியாளர்கள்  முருகன், தீபன், காயத்ரி, திவ்யா ஆகியோர் ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தினர்.கடலூரில் என்ஜேயூ சார்பில் செய்தியாளர்கள் கடலூர் .பி. முத்துகுமரன், புதுச்சேரி எம். லோக நாராயணன், கடலூர் எம். கனகசபை, கடலூர் வி. வி. ராமச்சந்திரன், கடலூர்  .தனசேகர் ஆகியோர் தாம்பரம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் குளிர்சாதனப் பெட்டி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து அவர்கள் அனைவருடைய ஆன்மாவும் சாந்தி அடைய இறைவனை வேண்டி மௌன அஞ்சலி செலுத்தினர். 

புதுச்சேரியில் என்ஜேயூ சார்பில் செய்தியாளர்கள் லோகநாதன், செல்லப்பா தலைமையில், தாம்பரம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் குளிர்சாதனப் பெட்டி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருடைய ஆன்மாவும் சாந்தி அடைய இறைவனை வேண்டி மௌன அஞ்சலி செலுத்தினர்

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில செயலாளர் ஜெ.பிரேம்குமார், ஹரிபாபு ஆகியோர் தாம்பரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குடும்பத்துடன் அகால மரணமடைந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆன்மா சாந்தியடைய வேண்டி மௌன அஞ்சலி செலுத்தினர்