சென்னையில் என்ஜேயூ ஆலோசனை கூட்டம்!

29-06-2019

சென்னையில் என்ஜேயூ ஆலோசனை கூட்டம்!

சென்னை, ஜூன் 29, 2019-

சென்னை பெசன்ட் நகரில் உள்ள நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.


சென்னையில் நேற்று நடந்த நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் அவசர ஆலோசனை கூட்டத்தில், செய்தியாளர்களுக்கு செய்தித்துறை வழங்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். ரயிலில் பயணம் செய்ய சிறப்பு சலுகை விலையில் பயண அட்டை வழங்க வேண்டும். ஊடகம் ஸ்டிக்கர்கள் பல மாவட்டங்களில் உண்மையான செய்தியாளர்களுக்கு வழங்காமல் அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றும் செய்தி தொடர்பு அலுவலர்கள் இழுத்தடிப்பது கண்டிக்கத்தக்கது. விரைவில் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், கேமராமேன்கள், உதவி ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து பிரஸ் ஸ்டிக்கர்கள் பிஆர்ஓக்கள் வழங்க வேண்டும். விளம்பர பிரிவில் பணியாற்றுவோர் உள்ளிட்ட பல நிலைகளில் பல பிரிவுகளில் பணியாற்றுவோருக்கு தேவையின்றி பிரஸ் ஸ்டிக்கர்களை வாரி வழங்குவுது கூடாது. தமிழகத்தில் செய்தியாளர்கள் இனி தாக்கப்பட்டால் என்ஜேயூ எடுக்கும் நடவடிக்கைகள் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று இருக்காது, இதை வேறு விதமாக கையாள்வது என்றும், செய்தியாளர்கள் மீது அரசியல்வாதிகள் கை வைக்கவே அஞ்சி நடுங்கும் நிலைக்கு கொண்டு செல்ல என்ஜேயூ புதிய வியூகம் வகுத்து செயல்படுத்த உள்ளது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த அவசர ஆலோசனை கூட்டத்துக்கு என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தேசிய இணை செயலாளர் .வாசுதேவன், தமிழ் மாநில செயலாளர் ஜெ.பிரேம்குமார், மாநில பொருளாளர் சே.ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் .எழிலரசன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் .பிரபாகரன், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ரா.ராமன்குமார், வடக்கு மண்டல தலைவர் எஸ்.ராமலிங்கம், வடக்கு மண்டல பொருளாளர் கருணாகரன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் சூரியராஜன், துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கோவர்த்தனன், புதுச்சேரி மாநில நிர்வாகிகள் லோகுநாராயணன், பி..செல்லப்பா, சி.கலியமூர்த்தி() ஜெயபால், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.