என்ஜேயூ முப்பெரும் விழா!

03-06-2019

என்ஜேயூ முப்பெரும் விழா!

செய்தியாளர்கள் குழந்தைகளுக்கு RTE-ல் 5% இட ஒதுக்கீடு
தீர்மானம் நிறைவேற்றம்

வேலூர், ஜூன் 3-

வேலூரில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் குமார் பிறந்த நாளை முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

வேலூரில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் பிறந்த நாளையொட்டிநேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் உள்ள உறுப்பினர்களின் வசதியற்ற குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவாகவும், என்ஜேயூ உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் உள்ள உறுப்பினர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் ஏற்று தீர்மானம் ஆகிய முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


சங்கத்தில் உள்ளவர்களது மாணவ பிள்ளைகளுக்கு பள்ளி கல்வி உதவித்தொகையை தனது பொற்கரத்தால் மாணவர்களுக்கு வழங்கினார் தேசிய தலைவர் கா.குமார். இந்த விழாவில் தேசிய பொதுச்செயலாளர்

இரா.தாட்சாயிணி, தேசிய இணை செயலாளர் .வாசுதேவன், மாநில தலைவர்கள், துணை தலைவர்கள்ஒருங்கிணைப்பாளர்கள்மகளிரணி நிர்வாகிகள்நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

 

 

ஆலோசனை கூட்டம் - தீர்மானம் நிறைவேற்றம்

இதையடுத்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தரப்படும் 25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் 5 சதவீதத்தை பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். சுங்கச்சாவடியில் பத்திரிகையாளர்கள் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது, அரசு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை செய்தியாளர்களுக்கு வழங்க வேண்டும்.


செய்தியாளர்கள் அனைவருக்கும் தமிழகம் முழுவதும் பாகுபாடின்றி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வாயிலாக வழங்கப்படும் இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்க வேண்டும். பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும். இதனால் பத்திரிகையாளர்கள் வாழ்வில் ஒளிபிறக்கும் உள்ளிட்ட 10 அம்ச தீர்மானங்கள் ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டன.


இந்த தீர்மான நகலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரிடம் வழங்குவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசிய இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதற்கு முறையாக அறிவிப்பு செய்யப்பட்டு அவரை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் கா.குமாரின் ஆயில் பெயிண்டிங் வரைபடம் ஒன்றை பிரபாகரன் நினைவுப்பரிசாக வழங்கினார்.   பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வருகை தந்து வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு தனது நன்றியை காணிக்கையாக்கினார் என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தேநீர் விருந்து வழங்கப்பட்டது. இப்படி முப்பெரும் விழா கோலாகலமாக நடந்து இனிதே நிறைவு பெற்றது.