என்ஜேயூ தேசிய தலைவர் குமார் பிறந்த நாளில் முப்பெரும் விழா!

01-06-2019

என்ஜேயூ தேசிய தலைவர் குமார் பிறந்த நாளில் முப்பெரும் விழா!

செய்தியாளர்கள் குழந்தைகளுக்கு RTE -ல் 5% இட ஒதுக்கீடு தீர்மானம் 


வேலூர், ஜூன் 1-

வேலூரில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் குமார் பிறந்த நாளில் முப்பெரும் விழா நடந்தது.

வேலூரில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் பிறந்த நாள் விழா, ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, என்ஜேயூ உறுப்பினர் களுக்கு அடையாள அட்டை வழங்கும் ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி முதல் தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப், முகநூல் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து உற்றார், உறவினர்கள், நண்பர்கள், செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், வீடியோ கேமிராமேன்கள், காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனருமான கா.குமாருக்கு வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ந்தனர். இதையடுத்து காலை முதல் நேரில் வாழ்த்துக்களை பரிமாறினர். இந்நிகழ்வில் செல்லியம்மன் ஸ்வீட்ஸ்  உரிமையாளர் ராஜ்குமார் குடும்பத்துடன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.  அதையடுத்து காட்பாடி வழக்குரைஞர் பிரபு சந்தனமாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார். 

இதையடுத்து சென்னையில் இருந்து செய்தியாளர்கள் குழுவினர் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர். என்ஜேயூ மாநில தலைவர் கா.குமார் அவர்களை தமிழ் மாநில செயலாளர் ஜெ.பிரேம்குமார், மாநில பொருளாளர் எஸ்.ரமேஷ், மாநில கௌரவ தலைவர் ஜி.பி.பூவரசன் சந்தன மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.  மாநில இணை செயலாளர் இ.லட்சாபதி, மாநில துணை செயலாளர் ஜி.நரேஷ்குமார், வடக்கு மண்டல பொருளாளர் எஸ்.கருணாகரன், இணை ஒருங்கிணைப்பாளர் ஏ.பிரபாகரன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் என்.செல்வம், வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் டி.ஸ்ரீராமுலு, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் மகிழ்ந்தனர். தருமபுரி மாவட்ட தலைவர் தருமலிங்கம், பொருளாளர் செந்தில் ஆகியோர் சால்வை அணிவித்து மகிழ்ந்தனர்.  மாநில ஒருங்கிணைப் பாளர் என்.எழிலரசன்,  ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.  இதையடுத்து மாநில தலைவர் ரமேஷ் ஆனந்தராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.  

இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கு மண்டல தலைவர் எஸ்.ராமலிங்கம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் உமாபதி, செயற்குழு உறுப்பினர் காந்தி உள்ளிட்ட சிலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இப்படி நாள்முழுவதும் வாழ்த்து மழையில் நனைந்தார் தேசிய தலைவர் குமார். இதையடுத்து மாலை 6 மணிக்கு புதுச்சேரி மாநில தலைவர் லோகநாதன் தலைமையில் செய்தி யாளர்கள் குழுவினர் மற்றும் என்ஜேயூ நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஈரோடு மண்டல தலைவர் ப.சாமிநாதன் சந்தன மாலையும், சால்வையும் அணிவித்து மகிழ்ந்தார்.  

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மாலையில் வேலூர் காலச்சக்கரம் நாளிதழ் அலுவலகத்தில் உள்ள 4ம் தள கூட்ட அரங்கில் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

சங்கத்தில் உள்ளவர்களது மாணவ பிள்ளைகளுக்கு பள்ளி கல்வி உதவித்தொகையை தனது பொற்கரத்தால் அந்த மாணவர்களுக்கு வழங்கினார் தேசிய தலைவர் கா.குமார். இந்த விழாவில் தேசிய பொதுச்செயலாளர் 

இரா.தாட்சாயிணி, தேசிய இணை செயலாளர் ச.வாசுதேவன்,  மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ராமன்குமார், மற்றும் மகளிரணி நிர்வாகிகள் ஈரோடு, காயத்ரி, திவ்யா, கயல்விழி மற்றும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். கேக் வெட்டியதும் இனிப்பு, காரம், குளிர்பானம் வழங்கப்பட்டது. 

ஆலோசனை கூட்டம் - தீர்மானம்

இதையடுத்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தரப்படும் 25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் 5 சதவீதத்தை பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். சுங்கச்சாவடியில் பத்திரிகையாளர்கள் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது, அரசு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை செய்தியாளர்களுக்கு வழங்க வேண்டும். 

செய்தியாளர்கள் அனைவருக்கும் தமிழகம் முழுவதும் பாகுபாடின்றி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வாயிலாக வழங்கப்படும் இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்க வேண்டும். பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும். இதனால் பத்திரிகையாளர்கள் வாழ்வில் ஒளிபிறக்கும் உள்ளிட்ட 10 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்த தீர்மான நகலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரிடம் வழங்குவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசிய இணை செயலாளர் ஜி.சரவணன் தேசிய இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதற்கு முறையாக அறிவிப்பு செய்யப்பட்டு அவரை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  

இதைத்தொடர்ந்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் கா.குமாரின் ஆயில் பெயிண்டிங் வரைபடம் ஒன்றை பிரபாகரன் நினைவுப்பரிசாக வழங்கினார்.   இப்படி முப்பெரும் விழா கோலாகலமாக நடந்து இனிதே நிறைவு பெற்றது.